Latest News :

மகனுக்காக நடிப்புக்கு விடை கொடுக்கும் தம்பி ராமையா!
Tuesday October-31 2017

தேசிய விருது பெற்ற நடிகரான தம்பி ராமையா, குணச்சித்திரம், காமெடி, வில்லன் என பல வேடங்களில் நடிக்கும் பிஸியான நடிகராக வலம் வரும் நிலையில், தனது மகனுக்காக சில மாதங்கள் நடிப்புக்கு விடை கொடுக்கிறார். அதே சமயம், தனது மகனுக்காக அவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.

 

இரண்டு படங்களை இயக்கியிருக்கும் தம்பி ராமையா, தற்போது நடிகராக மட்டுமே தனது சினிமா பயணத்தை தொடர்ந்த நிலையில், தனது மகன் உமாபதிக்காக மீண்டு படம் இயக்குகிறார். ‘உலகம் விலைக்கு வருது’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மிருதுளா முரளி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்,  சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

தேன்மொழி சுங்குரா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்.30) புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

 

தப்பட்டம் மயிலாட்டம் புலியாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் 4 கேமராக்களுடன் தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது.

 

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைக்க, கோபிநாத் எடிட்டிங் செய்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். சண்டைப்பயிற்சியை ஹரி தினேஷ் கவனிக்க, மக்கள் தொடர்பு பணியை நிகில் கவனிக்கிறார்.

Related News

1162

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery