சினிமா நடிப்பு என்பது தனது தொழில், அதனால் ரசிகர்களும் அவர் அவர் வேலையை பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு கட்-அவுட் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது, என்பதற்காக ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேகம் படத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அஜித், தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே, அரசியல் குறித்து ரசிகர்களிடம் அஜித் பேசியதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய், விஷால், கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வமாக உள்ள நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். இது குறித்து ரசிகர்கள் சிலர் அஜித்திடம் பேசியபோது, “தனக்கு அரசியல் சரிபட்டு வராது” என்று அஜித் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரசிகர்கள் ஒருவர் கூறுகையில், “அஜித் நடிப்பை தொழிலாக மட்டுமே பார்க்கிறார். ரசிகர்களை வைத்து விளம்பரம் தேடுவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டார். அதேபோல், பட விநியோகம், தயாரிப்பது போன்ற பலவிதத்தில் சம்பாதிப்பதையும் விரும்ப மாட்டார். அவர் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால், அவற்றை விளம்பரத்திற்காக பயன்படுத்த மாட்டார்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், அதை அவரிடமும் தெரிவித்தோம். ஆனால், ”தனக்கு அரசியல் சரிபட்டு வராது” என்று கூறிவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...