முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, தனக்கு வரும் ஹீரோ வாய்ப்புகளை நிரகாரித்துவிட்டு, காமெடியனாகவே நடித்து வருகிறார்.
காமெடியனாக நடிப்பதிலேயே நல்ல வருமானம் வருகிறது, பிறகு எதற்கு ஹீரோ போன்ற ரிஸ்க் எடுப்பது, என்ற நிலையில் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்துக் கொண்டிருக்கும் சூரி, தற்போது புதிய தொழில் ஒன்றையும் தொடங்க இருக்கிறார். அது தான் ஓட்டல் தொழில்.
தான் நல்ல நிலைக்கு வந்தாலும், தனது குடும்பத்தாரையும் நல்ல நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தான் சூரி, இந்த ஓட்டலை கட்டியுள்ளாராம். மதுரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் மூழுவதையும் சூரியின் குடும்பத்தார் தான் நிர்வகிக்க போகிறார்களாம்.
இந்த ஓட்டலை சூரியின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...