சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்து குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சுசீந்திரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்படம், ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்று முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படமாகும். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதைக் கொண்ட இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறாராம்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஒரு பெண்ணின் பெயர் இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டதோடு, இம்மாத இறுதியில் அந்த தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் சுசீந்திரன், தெரிவித்துள்ளார். படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...