சென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது, என்று நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது அரச்சுக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முன் அறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, நாராயணபுரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரம் ஆகாது.
நீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்து பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை.
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கும் நீர் வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரல் எழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவவேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...