’சண்டைகோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் விஷால், கல்லூரி மாணவி ஒருவர் படிப்பை தொடர முடியாமல் கஷ்ட்டப்படுவதை அறிந்து அவருக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
’சண்டைகோழி 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஷாலுக்கு, திருபோரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்ற Bsc மாணவி தனது 3 ம் ஆண்டு படிப்பை தொடர முடியாமல் சிரமத்தில் இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தனது தேவி அறக்கட்டளை மூலம் மாணவி மகாதேவிக்கு ரூ.14 ஆயிரம் நிதி வழங்கி, அவரது படிப்பை தொடரச் செய்துள்ளார் நடிகர் விஷால். மேலும், நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரது மகனின் படிப்பு செலவுக்காகவும் ரூ.18 ஆயிரத்தை விஷால் வழங்கியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...