ஒரே நேரத்தில் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் விஷால் நடித்து வந்தார். இதில் துப்பறிவான கடந்த ஆண்டும், இரும்புத்திரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய பணிகளில் விஷால் தீவிரம் காட்டியதால், தனது படங்களின் பணிகளை ஒதுக்கிவிட்டார். இதனால், குறிப்பிட்ட தேதிகளில் இப்படங்களை வெளியிடமுடியாமல் போய்விட்டது.
இருந்தாலும், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக ‘துப்பறிவாளன்’ அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து ‘சண்டைகோழி 2’ படத்தை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி ஆரம்பித்த விஷால், தற்போது பெய்து வரும் கனமழையிலும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல், இரும்புத்திரை படத்தை 2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள விஷால், அப்படத்தின் படப்பிடிப்பிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர், வின்சண்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல நடிக்கின்றனர்.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...