‘புலிமுருகன்’ படத்தை தொடர்ந்து மோகன்லால் - விஷால் கூட்டணியில் உருவான ‘வில்லன்’ படம் கேரளாவில் வசூலில் சாதனை புரிந்துள்ளது.
மோகன்லால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்த படம் வில்லன். மலையாளப் படமான இப்படம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.
அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் விஷால் தான் வில்லன். விஷாலின் முதல் மலையாளப் படமான இப்படம் தான் மோகன்லாலின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன்லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இது தான் என்று கூறப்படுகிறது.
வில்லன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் ( தெலுங்கு நடிகர் ), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பஜிரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...