வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்க, சங்கிலி முருகன், வேலராமமூர்த்ஹ்டி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், கே.டி.எஸ்.பாஸ்கர், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, டி.எச்.ஆர்.ராகா மாறன், அற்புதன் விஜய், ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் பிக் பாஸ் பிரபலமான சினேகன் நடனம் ஆடி அசத்தியிருக்கிறார். அவருடன் 200 டான்ஸ்கர்களும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்கள்.
இது குறித்து இயக்குநர் எஸ்.விஜயசேகரன் கூறுகையில், “உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே ’எவனும் புத்தனில்லை’.
சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.
”எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை...”என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வீடியோவை நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, மலேசிய பாப் பாடகர்கள் மாமா மாப்ள, கே16, விங், முரு, ஆறு, டிஎச்ஆர் ராகா மாறன் ஆகியோர் பாடியுள்ளார்கள்.” என்றார்.
டி.எஸ்.சுரேஷ்குமார் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ராஜா .சி.சேகர், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஏ.பழனிவேல் கலையை நிர்மாணித்துள்ளார். சினேகன் பாடல்கள் எழுத மரியா மனோகர் இசையமைத்துள்ளார். அசோக்ராஜா, சங்கர் ஆகியோர் நடனம் அமைக்க, அன்பறிவு, மிராக்கில் மைக்கேல் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். சுரேஷ் அர்ஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
கே.டி.எ.ஸ்.பாஸ்கரன், கே.சுப்பிரமணியம், ஐ.ஜோசப் ஜெய்சிங், எம்.கார்த்திகேயன், வி.சி.சூரியன் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்குகிறார்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...