Latest News :

சென்னையின் மிக ஆபத்தான பகுதி பற்றி சொல்லும்‘கரிக்காட்டுக் குப்பம்’!
Thursday November-02 2017

ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜே.எம்.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் ‘கருக்காட்டுக் குப்பம்’.

 

கிழக்கு கடற்கரை சாலையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’ படத்தில் சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதிகள் என்று சொல்லப்படும் 10 இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’.

 

அமானுஷ்ய சக்திகளின் கூடாரம் என்று கருதப்படும் இந்த பகுதியில் தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள் மற்றும் சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாக கூறப்படுகிரது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ‘கரிக்காட்டுக் குப்பம்.

 

அபி சரவணன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்வேதா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் விவேக் நடித்த ‘நான் தான் பாலா’ படத்தில் நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைக்க சினேகன் பாடல்கள் எழுதுகிறார். லாரன்ஸ் சிவா நடனம் அமைக்க, பயர் கார்த்திக் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

படம் பற்றி இயக்குநர் ஜே.எம்.நூர்ஜஹான் கூறுகையில், “இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு முன்பே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன்  காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப்பட்டு கடன் வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதளிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன? என்பதை திகில் கலந்த படமாக ‘கரிக்காட்டுக் குப்பம்’ உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.” என்றார்.

 

இப்படத்தின் தொடக்க விழா நேற்று (நவ.01) சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் கில்ட் தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், சினேகன் உள்ளிட்ட ‘கரிக்காட்டுக் குப்பம்’ படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

Related News

1177

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery