விஜய் மற்றும் அஜித்துக்கு பொது மக்கள் மட்டும் ரசிகர்களாக இருப்பதல்ல, சில பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பட்டியலில் நடிகர் ஜெய்யும் ஒருவர். தீவிர அஜித் ரசிகரான ஜெய், தற்போது விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான விஜயின் ‘பகவதி’ படத்தில், அவருக்கு தம்பி வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான ஜெய், சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெய், “எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி.” என்று கூறியதோடு, “என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை” என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர் ஒருவர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, அவரை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...