ஆரி நடிப்பில் உருவாகும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘மெளன வலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆரிக்கு ஜோடியாக ஸ்மிருதி நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் இப்படத்தை ‘களம்’ படத்தை இயக்கிய ராபர்ட் இயக்குகிறார். பாரூக் பாஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை கலைத்துறையை கவனிக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சியை மேற்கொள்இறார். நிர்வாக தயாரிப்பை கார்த்திக்சந்திரன் கவனிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...