ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திரிஷா, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘கரஜனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கூடவே ‘பரமபதம் விளையாட்டு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஷிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதையடுத்து நடைபெறும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் விதத்தில் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
24HRS என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிச்சர்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பிரேம் எடிட்டிங் செய்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...