புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சீமத்துரை’.
கீதன், வர்ஷா பொல்லம்மா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், சுந்தர பாண்டியன் சரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சீமத்துரை குறித்து இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.
அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.
வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் 'சீமத்துரை’” என்றார்.
ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். டி.திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, ’மேயாதமான்’ படத்தின் ’தங்கச்சி’ பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை, ’பிச்சைக்காரன்’ படத்தின் படத்தொகுப்பாளரான டி.வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை ’மரகத நாணயம்’ படத்தின் கலை இயக்குநர் என்.கே.ராகுலும் மேற்கொண்டுள்ளனர். இணை தயாரிபை ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம் கவனிக்க, புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...