விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். வில்லனாக அறிமுகமானாலும் தற்போது ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ், ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜித் ரசிகராக நடிக்கிறார்.
‘மேயாத மான்’ புகழ் இந்துஜா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை சரவணஷக்தி இயக்குகிறார். ஜே.கே.பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பாக கே.சி.பிரபாத் இப்படத்தை தயாரிப்பதோடு, வில்லனாகவும் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் கே.சி.பி, தர்மேஷ், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. மேலும், இப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.
எம்.ஜீவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இளையவன் இசையமைக்க, ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். மேட்டூர் செளந்தர் கலையை நிர்மாணிக்க, கலைக்குமார், தனிக்கொடி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். கல்யாண், விஜி, சேண்டி ஆகியோர் நடனம் அமைக்க, சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். நிகில் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...