Latest News :

ரஜினிகாந்துடன் ஆர்.கே.செல்வமணி திடீர் சந்திப்பு
Wednesday August-02 2017

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமாகிய பெப்ஸிக்கும் இடையே சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, நேற்று முதல் சினிமா வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நேற்று பல படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், ரஜினிகாந்தின் ‘காலா’ உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதாகவும், நேற்று தமிழகத்தில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை என்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

 

மேலும், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காணவே பெப்ஸி விரும்புவதாக கூறிய அவர், ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தால் அதை நாங்கள் வரவேற்போம், என்றும் கூறினார்.

 

இந்த நிலையில், இன்று ஆர்.கே.செல்வமணியை ரஜினிகாந்த் திடீரென்று சந்தித்துள்ளார். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதற்காக ரஜினிகாந்த் செல்வமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதேபோல் தயாரிப்பு சங்க நிர்வாகிகளிடமும் பேசிவிட்டு, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே செல்வமணியிடம் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

120

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery