Latest News :

'நெஞ்சில் துணிவிருந்தால்' எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் - விக்ராந்த்
Tuesday November-07 2017

'நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்புர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர் சுசீந்திரன் சார்.

 

பாண்டிய நாட்டிற்கு பிறகு என்னை அழைத்தார் நான் சென்றேன் அவர் கூறியது போல் நடித்தேன். சுசீந்திரன் சாரை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு முகவரி அளித்தது. அதுபோல் அவர் என்னை திருப்பி அழைத்ததே மிகுந்த சந்தோஷம். அவர் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் என் சகோதரர் ஆவர் அவருக்கு நான் மிக கடமைபட்டுள்ளேன். சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்க தயார். சுசீந்திரன் சார் என்னிடம் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம் முதலில் சாதுவா காட்டலாம் என்று கண்ணாடிலாம் கொடுத்தாங்க. அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும் என்றார். 

தொண்டன் போன்ற படங்களில் கோவக்காரனை போல் இருக்கும் அதுபோல இல்லாமல் இந்தப்படமும் அடுத்து வரும் வெண்ணிலா கபடி குழுவாக இருக்கட்டும் இரண்டிலும் நகைச்சுவையான விஷயம் இருக்கணும்னு முயற்சி செய்து உள்ளோம். 

பாண்டிய நாடு படத்தில் சூரி அண்ணாவுடன் நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன் இந்த படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் வைசாக்-ல் ஒன்றாக மிகுந்த சந்தோசமாக இருந்தோம். சூரி அண்ணா எனக்கு நீண்ட நாள் பழக்கம் அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே உள்ளார். சந்தீப் இந்த படத்தில் இருந்து தான் பழக்கம் நல்ல நட்பு ரீதியா பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்துக்கொள்வோம். மெஹரின் தெலுங்கில் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து உள்ளது அது சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்து உள்ளது. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்கள் தமிழிலும் மிக பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக்கொள்கின்றேன். ஹரிஷ் உத்தமன் அண்ணன் பாண்டிய நாடு படத்தில் என்னுடன் முதல் முறையாக நடித்தார் எங்கள் எல்லாருக்கும் அந்த படம் திருப்பு முனையாக இருந்தது அவருடன் மீண்டும் பணியாற்றியதில் மிகுந்த சந்தோஷம். இது ஒரு குழு என்று இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து பணியாற்றிய படம் அதன் வெளிபாடு திரையில் தெரியும். 

நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன் இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரபித்தேன் இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது. சுசீந்திரன் சார் இந்த படம் ஆரம்பத்திலேயே சொல்லியது அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம் முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நீ. மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான். படத்தை செல்வசேகரன் சார் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாக கற்று வருகிறேன் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும். 

வெண்ணிலா கபடி குழு முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை அக்கதையை பொறுத்த வரை சுசீந்தரன் சாரின் தந்தை தான் நிறுவனர். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. கவண், தொண்டன், கெத்து நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர் பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. 

 

பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதே போன்று நடிப்பு திறமையை தொடர வேண்டும் என்று  உக்குவித்தார் மேலும் இன்னும் சில இயக்குனர்கள் பாராட்டினார்கள் அது எனக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் உக்குவிக்கிறது. இனி வரும் படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன். என்று விக்ராந்த் கூறினார்.

Related News

1202

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery