ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..!
Tuesday November-07 2017

‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க!

 

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’..   விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.

 

இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்.. 

 

பரிசுப்பொருட்கள் விபரம் 

 

32 கிராம் தங்க காசுகள் 

6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு 

சாம்சங் s8 போன் 

சோனி ஹோம் தியேட்டர் 4100

சோனி டிவி 4k (50 இன்ச்)

பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)

டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..)

 

உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.

Related News

1206

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery