பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகர் - நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவானி. தந்தை வழியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் படம் ஒன்றில் நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
புது காரில் ஷிவானி ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதி அருகே வேகமாக சென்றுள்ளார். வேகத்தடை இருந்ததை கவனிக்காமல் அதில் ஏற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த புது ஜீப் மீது மோதியது.
இந்த விபத்தில் ஷிவானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜீப் மோசமாக சேதம் அடைந்தது. ஜீப்பின் உரிமையாளரான பிரபல தொழில் அதிபர் ஷிவானி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கு புது ஜீப் வாங்கித் தருமாறு அந்த தொழில் அதிபர் தெரிவித்துள்ளார். போலீஸ் கேஸ் வேண்டாம் நாமே பேசித் தீர்ப்போம் என்று ராஜசேகர் தொழில் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...