பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்று துவக்கத்தில் அனுதாபத்தை பெற்று வந்த ஜூலி பின்னர் பலரின் சர்ச்சைகளுக்கு உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு தற்போது அதிகளவில் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளது. சொல்லப் போனால் ஓவியாவுக்குப் பின்னர் ஜூலிக்குத்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த ஜூலி திடீரென கலைஞர் டிவிக்கு தாவினார். இதில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மூன்று மாதங்களுக்கு ரூ. 30 லட்சம் சம்பளமாக ஜூலி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...