பிரபல சினிமா பைனான்சியரான முகுந்த்சந்த் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் ஓட்டல் அதிபர் செந்தில் கணபதி, சதீஷ்குமார் ஆகியோர் கொடுத்த புகார்களின் அடைப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ரா மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து அவரையும், அவரது இரண்டு மகன்களையும் கைது செய்துள்ளது.
இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் நாகர் என்ற டிராவல்ஸ் ஏஜெண்டு போத்ரா மீதும், அவரது மகன்கள் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்தார். ரூ.5 லட்சம் கடனுக்காக ரூ.2¾ கோடி கேட்டு மிரட்டியதாக அந்த புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகுடிஸ்வரி போத்ரா மீதும், அவரது மகன்கள் மீதும் 3-வது வழக்கை பதிவு செய்தார். சென்னை எழும்பூரைச் சேர்ந்த வைர நகை வியாபாரி பகன்சந்த் பண்டாரி கொடுத்த புகாரில் 4-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நேற்று 3-வது வழக்கில் போத்ரா மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கண் நோயால் போத்ரா அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை போலீசார் சென்னை எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்குப்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் போத்ராவை 3-வது வழக்கில் கைது செய்யவில்லை. இந்த நிலையில், போத்ராவை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.
சினிமா பைனான்சியர் போத்ரா மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது முதலில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போத்ரா நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீது புகார் மனுக்களை கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...