சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் ராம்பாலா தனது அடுத்த படத்திற்கு ‘டாவு’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதில் ஹீரோவாக கயல் சந்திரன் நடிக்க, ஹீரோயினாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் லிவிவிங்ஸ்டன், ஊர்வசி, முனிஷ்காந்த், மனோ பாலா, கல்யாணி நட்ராஜன், பாவ லக்ஷ்மணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
காதல் பிளஸ் காமெடி படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் ராம் பாலா கூறுகையில், “இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போடு உள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாக்கவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்து வரும் இளைஞர்களுக்கு பிடித்தமான தலைப்பு இது. இந்த தலைப்பை போல் இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buffs) நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க தீபக்குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில், சென்னையில் உள்ள கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...