‘மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன், தொடர் பட வாய்ப்புகளால் கோடம்பாக்க நடிகையாக வலம் வந்த நிலையில், ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள ‘2.0’ படம் தான் தமிழ் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசிப்படமாக மாறியுள்ளது.
ஹாலிவுட் சேரியலான ‘சூப்பர் கேர்ள்’ தொடரில் நடிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள எமி ஜாக்சன், “2018ல் இது தான் என் வீடு என வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்" என கூறியுள்ளார். அதனால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
அதை நிரூபிக்கும் விதமாக, தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த எமி சமீபத்தில் தான் விலகினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...