பிரபல டிவி தொகுப்பாள்ளினியான ரம்யா, ‘ஓ காதல் கண்மணி’, ‘வனமகன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், விரைவில் பிரபல இயக்குநருக்கு மனைவியாகப் போகிறார்.
திருமணமாகி விவாகரத்தான ரம்யா குறித்து இப்படி ஒரு தலைப்பை பார்த்தால், அனைவருக்கும் பகீர் என்று தான் இருக்கும். ஆனால், ரம்யா இயக்குநருக்கு மனைவியாகப் போவது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில்.
மணிமாறன் இயக்கும் ‘சங்க தலைவன்’ இயக்கும் படத்தில் தான் ரம்யாவுக்கு மனைவி ரோல். அவரது கணவராக நடிக்கப் போகும் இயக்குநர் சமுத்திரக்கனி.
வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படம் கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடிக்கிறார். கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்ப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...