’பாரிஜாதம்’ படத்தின் மூலம் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய தரன், தொடர்ந்து பல ஹிட் பாடல்கள் மூலம் கடந்த 10 வருடங்களாக தனது இசைப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், ‘மெட்ரோ’ பட நாயகன் சிரிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பிஸ்தா’ படத்திற்கு இசையமைக்கும் தரனுக்கு, அது 25 வது படமாகும். பலத்த போட்டி மிகுந்த தற்போதைய தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு படங்களிலேயே காணாமல் போகும் இசையமைப்பாளர்களுக்கிடையே தரன், இளம் வயதில் 25 படங்களைக் கடந்த இசையமைப்பாளராக திகழும் பெருமையை பெற்றுள்ளார்.
இசைத் துறையில் 25 ஐ கடந்த பெருமை அடைந்துள்ள தரன், பிரபல மாடல் அழகி தீக்ஷிதாவை திருமணம் செய்துக் கொண்டு விரைவில் இல்லர வாழ்வில் இணைய இருக்கிறர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...