சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15 ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். கிங்க்ஸ் நெட்வொர்க் கம்பெனி A.R.பிரபு விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சின்னத்திரை நடிகர், நடிகைகளின் பெயர், விலாசம், புகைப்படம் அடங்கிய டைரி ஒன்றை வெளியிட்டார். சின்னத்திரை தயாரிபளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
விழாவில் நடிகர்கள் சின்னிஜெயந்த், விமல், சூரி, ரோபோசங்கர், நடிகைகள் குஷ்பு, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் போஸ்வெங்கட் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...