Latest News :

விஜய் சேதுபதி வழியில் கோடம்பாக்கத்தில் கால்பதிக்கும் அஜித் கெளரவ்
Monday November-13 2017

தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்கள், குணச்சித்திர நடிகர்கள் கிடைப்பது குறும்படங்களின் மூலம் தான். இன்று பரபரப்பான ஹீரோவாக இருக்கக்கூடிய விஜய் சேதுபதி குறும்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். விஜய் சேதுபதி வழியில் கோடம்பாக்கத்தில் கால்பதிக்கிறார் அஜித் கெளரவ்.

 

ஹீரோவுக்கான மிடுக்குடன் இருக்கும் அஜித் கெளரவ்  பேசும்போது, “நன் படிச்சது பி.இ. சிவில் இன்ஜினியரிங். நடிப்பில் ஆர்வம் வந்ததால் அப்பாவிடம் அனுமதி கேட்டேன். படிப்பை முழுமையாக முடித்து விட்டு அப்புரம் சினிமாவுக்குப் போகலாம் என்றார். அப்பா ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.  நடிக்க முடிவு செய்தவுடன் முறைப்படி நடிப்பு கற்றுக்கொள்ள நினைத்தேன். போரூரில் உள்ள கத்துக்குட்டி கலைக்கூடம் பயிற்சி பட்டறையில் சேர்ந்து நடிப்பு கத்துக்கிட்டேன். கூத்துப்பட்டறை  முத்தூச்சாமியிடம் மாணவராக இருந்த வினோத் நடிப்பு சொல்லிக்கொடுத்தார்.

 

நடிப்பு முடிந்ததும் இயக்குனர் கோப்குமார் இயக்கும் இரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் படமே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்தது. படத்தின் பெயர் ‘கமலோகா’. அதாவது வான்வெளிக்கும்  பூமிக்கும் இடையே உள்ள கற்பனை உலகம் தான் அது.

 

இந்திய அரசாங்கம் தற்கொலை தடைச் சட்டத்தை மேலாய்வு செய்து அதன் மீது இருக்கும் தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியதாக ஒரு கற்பனை.  அதன்படி யாராவது தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தால் அவர்களை தயவு கோட்பு முறைப்படி சாகடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியையை ஒரு தனியார் அமைப்புக்கு வழங்கியுள்ளது. தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்களின் உடல் உருப்புக்களை தானம் செய்யவும். தற்கொலை செய்ய முடிவு செய்பவர்களுக்கு இருக்கும் கடன் சுமைகளை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக படம் துவங்கும். அதன்படி ஒரு இளைஞர் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன தோல்விகளுக்காக விரக்தி அடைந்து தற்கொளை செய்துகொள்ள முடிவு செய்கிறார். அந்த அமைப்பிடம்  தற்கொளை செய்துகொள்வற்காக போய் சேர்ந்துவிடுகிறார். 

 

அங்கு போன பிறகு தற்கொலை செய்வது தவறு என நினைத்து தன்னை உயிருடன் விட்டு விடும்டி கெஞ்சுகிறார். ஆனால் அந்த அமைப்போ தாங்கள் செய்வது பிசினஸ், எனவே இங்கு வந்தர்கள் உயிருடன் போகமுடியாது என கூறி அந்த இளைஞரை ஊசி போட்டு சாகத்து விடுகிறார்கள். இது  தான் கதை. படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். என்னைப் பொருத்தவவரைக்கும் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்பதில்லை, மனதில் பதியும் கதாபாத்திரம் கிடைத்தாலே போதும், அதன்  மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி ஹீரோ அந்தஸத்தை அடையலாம். அப்படி கிடைக்கும் இடம்தான் நீடிக்கும். 

 

இயக்குனர் பாலா படத்தில் நடிக்க ஆசை. விஜய் சேதுபதி போல எல்லா வேடத்திலும் நடிக்க வேண்டும்.” என்றார்.

Related News

1243

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery