’ஹர ஹர மஹா தேவி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் ’இருட்டு அரையில் முரட்டுக் குத்து’ படப்பிடிப்பைத் துவங்கியது.
இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.
இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...