Latest News :

பப்ளிக்ஸ்டார் நடிக்கும் ‘காளியாட்டம்’
Wednesday August-02 2017

‘ராமர்’ படத்தை இயக்கிய வருண் ஆதிராஜா, பப்ளிக் ஸ்டாரை ஹீரோவாக வைத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘காளியாட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளார். கிங் பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே.அயோத்தி தயாரிக்கும் இப்படத்தில் பப்ளிக் ஸ்டாருக்கு ஜோடியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் 

அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள்  அறிமுகமாகிறார்கள்.

 

ரவுடிகளின்  ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ், போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள், இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் இப்படத்தில் சொல்லுகிறார்களாம்.

 

இ.ஜெ.நெளட்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரசாத் நிக்கி இஐயமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ராபர்ட் நடனம் அமைக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வருண் ஆதிராஜா இயக்குகிறார்.

 

சென்னையில் தொடர்ந்து 40 நாட்கள் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

Related News

125

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery