ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தி, தெலிங்கு, மலையாளம், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சார்லி சாப்ளின் 2’ என்ற தலைப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்க, முதல் பாகத்தில் நடித்த பிரபு தேவாவே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கு கல்ராணி நடிக்க, மற்றொரு ஹீரோயினாக அதாஷர்மா நடிக்கிறார்.
அம்மா கிரியேசன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு செளந்தரராஜன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். யுகபாரதி, ஷக்தி சிதம்பரம் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஆர்.கே.விஜய்முருகன் கலையை கவனிக்க, ஜானி நடனம் அமைக்கிறார். பென்னி எடிட்டிங் செய்ய, கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.
இப்படத்தின் கதை குறித்து கூறிய ஷக்தி சிதம்பரம், “பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகிறார்கள். அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின் 2’. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்.” என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில், “உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும்” என்றார்.
கோவாவில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...