சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது என இளம் நடிகர் அபி சரவணன் கூறியுள்ளார்.
குட்டிப்புலி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.
மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மால் திரையரங்குகளில் சோதனை என்ற பெயரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய் உள்ளது.... அதான் மெட்டல் டிடெக்டர் இருக்குல... அப்புறம் என்ன......... கைல வேற தடவி பார்குறாங்க?
சரி பெண்களுக்கு மட்டும தான் மானம் உண்டா .? ஆண்களுக்குை இல்லையோ?
பெண்களுக்கு உள்ளதைப் போல ஆண்களுக்கு அறை போன்ற மறைவில் சோதனை செய்யலாமே?" என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...