பல காரணங்களால் ரீலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி கிடந்த ‘உள்குத்து’ டிசம்பர் மாதம் ரிலிஸாக உள்ளது.
'திருடன் போலீஸ்' படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும், 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். 'உள்குத்து' படத்தை பி.கே பிலிம் பேக்டரி சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு பல முறை ரிலிஸ் ஆகாமல் போன இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலிஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ஜி.விட்டல் கூறுகையில், “தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றி பெற்ற தரமான படங்கள் இதற்கு சான்று. 'உள்குத்து' படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம்.
இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் 'உள்குத்து' படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...