Latest News :

எளிய மனிதர்கள் பற்றிய படமாக உருவாகும் ‘பொது நலன் கருதி’
Tuesday November-14 2017

கருணாகரன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘பொது நலன் கருதி’ படத்தில் சந்தோஷ், ஆதித் அருண், யோக்ஜாப்பி, அனுசித்தாரா, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி, வழக்கு எண் முத்துராம், சுப்ரமணியபுரம் ராஐா மேலும் பலர் நடித்துள்ளனர்.

 

அறிமுக இயக்குநர் சீயோன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படம், பணத்தை வைத்து  பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய படமாக உருவாகிறது.

 

இப்படம் குறித்து இயக்குநர் சீயோன் கூறுகையில், “இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துக் கொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலன்தான். காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது, பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக்கொண்டு, அதன் பின்பு அவர்களை எளிய மனிதர்கள் தங்களின் கோபத்தால் எதுவுமே செய்ய முடியாதபடி கட்டமைத்துக்கொண்டு எப்படி செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கிகொள்கிறார் என்பதினை திரைக்கதையின் மூலமாக எவ்விதமான சமரசத்திற்கும் இடமளிக்காது மக்களுக்கு உண்மையை காட்சிப்படுத்துவதுவே இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும்.” என்றார்.

Related News

1259

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery