Latest News :

மூன்று ஹீரோக்களுடன் இணைந்த சோனியா அகர்வால்!
Thursday August-03 2017

ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகிய மூன்று பேர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில், லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் சோனியா அகர்வால் நடிக்கிறார். மற்றும் ராஜேஷ், ராமசந்திரன், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முகமது ரிஸ்வான் இசையமைக்க, தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். எம்.ஆர்.ரெஜிஷ் எடிட்டிங் செய்ய, விஜய்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார். கெளசல்யா நடனத்தை கவனிக்க, பில்லா ஜெகன் ஆக்‌ஷன் ஏரியாவை கவனிக்க, தயாரிப்பு நிர்வாகத்தை மணிகண்டன் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா படம் குறித்து கூறுகையில், ”கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மூன்று இளைஞர்கள் எ.ஆர்.ஜெயகிருஷ்ணா ( ராஜ்), ஜெகா (ஜீவன்), உமேஷ்  (கணேஷ் ). பொருளாதார தேவைகளை நோக்கி பயணிக்கும்போது ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் பணத்துக்காக எதையும் செய்யும் கும்பலிடம் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் சுயரூபம் தெரிந்து இளைஞர்கள் இறுதியில் பணத் தேவைக்காக பணிந்தார்களா? இல்லை சதிவலையை உடைத்து மனசாட்சிக்கும், மனித நேயத்திற்கும் மகுடம் சூடினார்களா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வேகமும் விவேகமும் கலந்த, சுவாரஸ்யங்களுடன், அடுத்தடுத்து யூகிக்க முடியாத திரைக்கதையாக இருக்கும் விதத்தில் உருவாக்கி கதையின் நாயகனாக களமிறங்குகிறேன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.” என்றார்.

Related News

126

45 வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜீவா!
Monday January-12 2026

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

Recent Gallery