நயந்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அறம்’ விமர்ச்சன ரீதியாக பாரட்டப்பட்டு வரும் நிலையில் நயனும் நேரடியாக தியேட்டர்களுக்கு விசிட் அடித்து வருகிறார்.
படம் பல தரப்பினரிடம் பாராட்டு பெற்று வருவதை தொடர்ந்து, மெசஜ் சொல்லும் படங்களில் நடிக்க நயந்தாரா தீவிரம் காட்டி வருகிறாராம்.
இந்த நிலையில் முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்துவிட்டு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவில் இருந்த நயந்தாரா, விஜய்க்காக தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.
இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது.
இதில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...