தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக உள்ள சகோதரர்களான சூர்யாவும், கார்த்தியும் திருமணம் ஆன பிறகும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் நிலையில், திரைப்படம் ஒன்றின் மூலம் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் கார்த்தி, ”மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக கத்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்” என்று கூறி வருகிறார்.
சிங்கம் படங்களில் சூர்யா தான் சத்தமாக பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தான் கார்த்தி மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
கோபக்காராரன சூர்யாவின் காதுக்கு இந்த விஷயம் போக மனுஷன் டென்ஷனாகி விட்டாராம். இந்த விவகாரத்தால் சிவகுமார் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...