ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், 2015-ம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ், 2016-ம் ஆண்டுக்கு ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகரும், நந்தமூரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலுக்கு ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
என்.டி.ஆர். தேசிய விருது 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நினைவு பரிசும் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...