சமூக ஊடகங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் சினிமா கலைஞர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவராக தகிழ்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்த இவர், தொடர்ந்து பல அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமையல் கியாஸ் மானியம் ரத்து தொடர்பான அரசு அறிவிப்புக்கு, எதிராக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, “ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்று கூறியுள்ளார்.
மற்றொரு டிவிட்டில், ”ரேஷன் கட்டு, கியாஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு, மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. விளங்கும். இம்சை அரசன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...