Latest News :

இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பேய் பசி’!
Wednesday November-15 2017

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘பேய் பசி’ திரைப்படம் இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

 

அப்படி, எந்த வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸிடம் கேட்டதற்கு, “’Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும். இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். 

 

இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும். ஒரே இடத்தில்  நடந்தாலும், சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. 

 

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை இப்படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாகும். இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலில் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது அவரது இசை. இப்படத்திற்காக மிக சுவாரஸ்யமான  ஒரு ப்ரோமோ பாடலையும் அவர் இசையமைத்து பாடியுள்ளார். 

 

இப்படத்தின் தயாரிப்பாளர் 'Rise East Creation' ஸ்ரீநிதி ராஜாராம்  தமிழ் சினிமா துறைக்கு புதுவரவு என்றாலும் அவரது ஆதரவும், ஒத்துழைப்பும் , இப்படத்திற்காக  அவர் வைத்திருக்கும் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள்  அவரை பெரிய தயாரிப்பாளர்களுக்கு இணையாக்கும். தமிழ் சினிமாவில் மிகவும் பிரசித்தி பெற்ற  குடும்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணா பாஸ்கர் இப்படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கிறார்.  அவர் யார் என்கிற விவரத்தை விரைவில் அறிவிப்போம். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு  விபின், ஐ ஐ டியில் படித்து முடித்துள்ள  நமீதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டேனியல், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் ஒரு மிக சுவாரஸ்யமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

டோனி சானின் ஒளிப்பதிவில், தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமியின் உடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில், மதன் கலை இயக்கத்தில் ‘பேய் பசி’ உருவாகியுள்ளது.” என்றார்.

Related News

1270

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery