இயக்குநர் பாலாவின் படம் என்றாலே தற்போது உதறலோடு தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வர்கிறார்கள். அந்த அளவுக்கு காட்சிகளில் அளவுக்கு அதிகமான வன்முறையை காட்டும் பாலா, தனது சமீபத்திய படத்தின் மூலம் தியேட்டரை விட்டு ரசிகர்கள் தெரிக்க ஓடவிட்டார்.
இந்த நிலையில், ஜோதிகாவை வைத்து பாலா இயக்கி வரும் நாட்சியார் படத்தின் மூலம் ஜோதிகாவின் இமேஜை மனுஷன் டேமேஜாக்கியுள்ளார்.
நாச்சியார் படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. அக்மார்க் பாலா படம் என்பதை நிரூபித்துள்ள இந்த டீசரின் முடிவில், ஜோதிகா பேசியிருக்கும் அந்த _____ வசனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும், ஜோதிகாவை இப்படி ஆபாசமாக பேச வைத்த இயக்குநர் பாலாவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, திருமணத்திற்கு பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, இப்படிப்பட்ட வசனங்களை பேசி தனது நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார், என்றும் பேசி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...