கோலிவுட் நடிகர்களிலேயே தனக்கு என்று தனி பாதை போட்டுள்ள அஜித்துக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இதனாலேயே, அதித் படங்களுக்கு ஓபனிங் சிறப்பாக இருக்கும்.
ஆண், பெண் மற்றும் இளைஞர்கள் தான் அஜித்துக்கு ரசிகர்களாக இருப்பார்கள், என்று நினைத்தால் வயதானவர்களும் அஜித்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுவும் சாதாரண ரசிகர்கர்களாக அல்லாமல், அஜித்துக்காக கலவரமே செய்யக்கூடிய ரசிகர்களாக இருப்பது தான் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
ஆம், வயதான பெண்மணி ஒருவர் அஜித்துக்காக பேசும் வீடியோ ஒன்று வைரலாகிறது.
இதில் அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவி செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.
அஜித்தை பற்றி தப்பாக பேசுனால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்த பெண் மெட்ராஸ் பாஷையில் கோபமாக பேசிவிட்டு போவதை பார்த்தால், அஜித் குறித்து தப்பா பேசினால், பெரிய கலவரத்தையே நடத்திவிடுவார், என்று தான் தோன்றுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...