‘துப்பாக்கி’, ‘கத்தி’ என விஜையை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.
விஜயின் 62 வது படமான இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் ஒன்று கசிந்துள்ளது. முக்கிய சமூக பிரச்சினை குறித்துபேசும் இப்படத்தில் விஜய், தன் வயதிலேயே நடிக்கிறாராம்.
அதாவது, விஜய்க்கு தற்போது 43 வயதாகிறது. இதே வயதுள்ள கதாபாத்திரத்தில் தான் விஜய் நடிக்க உள்ளாராம். இதற்காக தனக்கு எப்போதுமுள்ள சிறு நரை முடியுடனேயே தான் படம் முழுவதும் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...