ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.
ஹார்வேர்ட் பலகலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ் திரையுல நடிகர்கள் பலர் நிதி உதவி செய்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன், ரூ.20 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதி நல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...