சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி த்ற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நாளை முதல் தமிழகம் முழுவதும் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் 20 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு, புது வெர்ஷன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலயில்படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெஞ்சில் துணிவிருந்தால் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...