Latest News :

காதலோடு பயணிக்கும் துல்கர் சல்மான்!
Friday November-17 2017

மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள துல்கர் சல்மான், தமிழிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இவர் விஜய் மில்டனிடம் உதவு இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.

 

படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறுகையில், “இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுது தான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை. 

 

மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம்  உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம். 

 

இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குனர் டி. சந்தானம்.  படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது” என்றார்.

Related News

1287

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery