சிவகார்த்திகேயன் - நயந்தாரா நடிப்பில் உருவாகியிள்ள ‘வேலைக்காரன்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களில், இரண்டாவது சிங்கள் ட்ராக் என்ற தலைப்பில் “இறைவா...” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும், ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடந்ததை இன்று (நவ.17) படக்குழுவினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...