தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஓவியாவுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் குயினாக திகழும் ஓவியாவுக்கு ஆதரவாக மீம்ஸ்கள், டிவிட்டர் கருத்துகள் என்று ஒரே ஓவியா புராணத்தை பாட, இசையமைப்பாளர் இளையராஜா ஓவியாவை விலாசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஓவியா சீனி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் முழுவதும் முடிவடைந்து வெளியாகமல் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ‘சீனி’ திரைப்படக் குழு, படத்தின் தலைப்பை ‘ஓவியா’ என்று மாற்றி விட்டது. மேலும், இப்படத்தின் ஒரு காட்சியில் இளையராஜாவின் ஒரு பாடலின் சில வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதை அறிந்த சிலர் ”தயாரிப்பாளரிடம், இளையராஜாவிடம் பாடல் வரி பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து சொல்லிவிடுங்கள், பிறகு ரிலீஸின் போது பிரச்சினையாகிவிட போகிறது. நீங்களே சொல்லிவிட்டால், அவர் ஓகே சொல்வதோடு, வாழ்த்தியும் அனுப்புவார், அதை செய்தியாக்கினால் படத்திற்கும் விளம்பரமாக இருக்கும்” என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு கனவு கண்ட ‘ஓவியா’ படத்தின் தயாரிப்பாளர் இளையராஜாவை சந்திக்க அதிகாலையில் சென்றுள்ளார். இளையராஜா எப்போதும் இருக்கும் அந்த இடத்தில் சென்ற தயாரிப்பாளருக்கு ராஜா சாரை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. பக்தியுடன் இளையராஜா முன்பு நின்ற தயாரிப்பாளர், ஏன் தான் இங்கு வந்தோமோ, என்று நினைக்கும் அளவுக்கு அவரை இளையராஜா விளாசி தள்ளிவிட்டாராம்.
தனது பாடல் வரியை எப்படி பயன்படுத்தலாம்? என்று வித்தியாசமான தோணியில், வித்தியாசமான வார்த்தையில் கேட்ட இளையராஜா, அந்த தயாரிப்பாளர் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில பச்சை வசனங்களை பேசியதோடு, “5 நிமிடத்திற்குள் இங்கிருந்து சென்றுவிடுங்கள், இல்லையெனில் நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.
இளையராஜாவின் வாழ்த்து கிடைக்கும் என்று ஆசை ஆசையாக சென்ற அந்த தயாரிப்பாளர், அவரது விளாசலால் ஆடிப்போய் இருக்கிறாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...