பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஹரிஸ் கல்யாணும், ரெய்சாவும் காதல் ஜோடிகளாகி விட்டார்கள். ஆனால், இது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில்.
ஹரிஸ் கல்யாண் - ரெய்சா நடிக்கும் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், யுவம் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை மணிக்குமரன் எழுதி இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கி இருப்பதுடன், கிருஷ்ணா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘கிரகணம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைப்பெற்று வருகிறது.
உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப் பட்ட படங்கள் தான். அந்த படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த பார்முலாவில் உருவாகும் படமே ‘பியார் பிரேமா காதல்’. காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் டைட்டில் வைத்திருக்கிறோம், என்கிறார் இயக்குனர் இளன்.
படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. ஒரு நல்ல காதல் கதை கிடைக்காதா, என்று காத்திருந்த எனக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கதை இது. பாடல்கள் மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது, என்றார் யுவன் சங்கர்ராஜா.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...