பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியானது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி கதாபாத்திரத்திலும் ஜோதிகா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த டீசரின் இறுதியில் காக்கிச் சட்டை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் நிலையத்தில் சிலரை பார்த்து ஆபாசம் நிறைந்த கெட்ட வார்த்தையால் திட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்துக்கு சமூக ஆர்வலர்களும், மாதர் சங்க அமைப்புகளும், நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், இயக்குனர் பாலா, ‘விளம்பரத்துக்காகவே இதுபோன்ற வசனத்தை ஜோதிகாவை பேச வைத்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார். மேலும் பலர் இந்த வசனத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மாதர் சங்கங்கள் இயக்குநர் பாலாவுக்கு எதிப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...