தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளில் வேதிகா நடித்து வந்தாலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது என்னவோ குதிரை கொம்பகத்தான் இருக்கிறது. தற்போது தமிழில் ‘காஞ்சனா 3’ மட்டுமே கைவசம் உள்ள வேதிகாவுக்கு பிற மொழிகளிலும் பட வாய்ப்புகள் சரியாக கிடைப்பதில்லை.
பட வாய்ப்புகள் பெறுவதற்காக, பல நடிகைகள் செய்யும் வேலையை வேதிகாவும் செய்ய தொடங்கியுள்ளார். அதாவது, வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருவது வழக்கம். அதுபோல பரவும் புகைப்படங்களால் சிலருக்கு வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
அதன்படி, வேதிகாவும் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்களில் பட்டு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கிறதா அல்லது ஐட்டன் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைக்கிறதா, என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...